உலகம் சந்தித்த கொடுமையான போர்களில் ஐந்து லட்சத்துக்கும் மேலாக உயிர்களை பலி கொண்ட இரண்டாம் உலகப்போரின் கதையை அனைத்து வன்ம நகர்வுகளையும் உள்ளடக்கிய ஆங்கில நுால்.
ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற பின், ஐரோப்பிய நாடுகள் மீது போர் செய்ய மேற்கொண்ட தந்திரம், போரைத் தடுப்பதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வி, போலந்து மீதான ஜெர்மனியின் தாக்குதலைத் தொடர்ந்து துவங்கிய இரண்டாம் உலகப் போரின் பரவல் போன்ற வரலாற்று நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.
போருக்கான நிர்ப்பந்தங்கள், வரலாற்றுப் பின்னணி, ஸ்வஸ்திக் கொடியின் வரலாறு, போரின் துவக்கம், போர் பரவல், பாசிச பேரரசின் அழிவு, நாசிப் படைகளின் சிதறல்கள், பிரிட்டனின் ஆளுமை, ஜப்பானியரின் திடீர் சீற்றம், இந்திய விடுதலை இயக்கம், ஜெர்மனி வீழ்ச்சி, வெடிகுண்டுப் பொழிவுகள், விமானத் தாக்குதல், போரின் முடிவு போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.
வல்லரசுகளின் ஆணவத்தால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வரலாற்றில் பதிந்துவிட்ட இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை, தற்காலத் தலைமுறையினரும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு