குறிப்பிட்ட வட்டாரத்தில் புழங்கும் பொருட்கள் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். பழந்தமிழ் இலக்கியங்களில் புழங்கும் பொருட்களையும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், கரியாபட்டி வட்டாரத்தில் புழங்கும் பொருட்களின் பழமை பற்றி தெளிவாக ஆராய்ந்துள்ளது. கல் சார்ந்த கருவிகள், மண் சார்ந்த பொருட்கள், மூங்கில் சார்ந்தது, இரும்பால் ஆன பொருட்கள் என பல அடிப்படை தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன.
மொத்தம் நான்கு இயல்களில் புழங்கு பொருட்கள் பற்றி விரிவாக பேசுகிறது, காரியாபட்டி வட்டார சிறப்பு, பண்பாட்டு சார் புழங்கு பொருட்கள், புழங்கு பொருட்களும் பயன்பாடும், புழங்கு பொருட்களின் பெயர்களும் விளக்கப்படங்களும் என்ற தலைப்புகளில் தகவல்கள்
அமைந்துள்ளன.
இப்போது புழக்கத்தில் உள்ள பொருட்கள் பற்றிய படங்கள் தெளிவாக பிரசுரிக்கப்பட்டு உள்ளன. ஒரு வட்டாரத்தின் பண்பாட்டு சிறப்பை உணர்த்தும் நல்ல புத்தகம்.
– மலர்