ஆங்கிலம், கணித அறிவால் ஆங்கிலேய வணிகர்களுக்கு, ‘துபாஷி’ என்ற மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த காஞ்சிபுரம் பச்சையப்பரின் வாழ்க்கையை விளக்கும் வரலாற்று நுால். சீனிவாச பிள்ளை இயற்றியது.
நவாப் – ஆங்கிலேயர் இடையே நின்று நில வரியைப் பெற்றுத் தருவதிலும், கடன்களைத் தீர்ப்பதிலும் உதவி புரிந்துள்ள செய்திகளை தருகிறது. ஆங்கிலேயர் தொடர்பால், தஞ்சை மராட்டிய மன்னரிடம் பழகும் வாய்ப்பு ஏற்பட்ட விதம், திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஆங்கிலேயருக்கு உதவிய செய்திகள் பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்களுக்குத் திருப்பணி, விருந்தோம்பல் என பல தகவல்களை தெரிவிக்கிறது.
சொத்துக்களை உயில் ஆவணம் எழுதி, உயிர் நீத்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சையப்பரின் வடிவம், வயது, குலம், கல்வி, உத்தியோகம், ஐஸ்வர்யம், தர்மம் போன்ற விபரங்கள் இடம் பெற்றுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்