திருக்குறள் காமத்துப் பால் குறள்களுக்கு ஒரு பக்க அளவில் எளிய உரை வழங்கும் நுால். உரையைச் சந்த நடையுடன் கதை சொல்லும் பாணியில் விவரித்துள்ளது சிறப்பாக உள்ளது. காமத்துப்பாலில் உள்ள இலக்கியக் கருத்துகளை இந்த உரைகள் எடுத்துரைக்கின்றன.
இது, புதிய இலக்கிய வகையாகவே அறிமுகம் ஆகிறது. குறளில் உள்ள சொற்களுக்கான அருஞ்சொற்பொருள், ஒவ்வொரு பக்கத்தின் கடைசி பகுதியில் தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, எளிதாக பொருள் கொள்ள உதவும்.
திருக்குறளின் மென்மை பகுதியான காமத்துப்பால் தொடர்பாக எளிதாக புரியும் வகையில் படிக்க உகந்த முதன்மை நுால்.
– முகிலை ராசபாண்டியன்