நகரத்தார் சமூக மக்களின் வாழ்வில் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தரும் நுால். நகரத்தார் மேற்கொள்ளும் மேன்மைமிகு விரதங்கள் என்ற தலைப்புடன் துவங்குகிறது. விரதம் செய்யும் காலம், அப்போது கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள், உண்ண தகுந்தவை, பயன்படும் பொருட்கள் என
மிகத் தெளிவாக விபரங்களை தருகிறது. உணவு வகைகளின் செய்முறையும் தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து நகரத்தார் சமூக மக்கள் கடைப்பிடிக்கும் விசேஷ நாட்கள், திருமணம் போன்ற விழாக்களின் போது கடைப்பிடிக்கும் வழக்கங்களையும் தெரிவிக்கிறது. அந்த சமூகத்தில் வாழ்ந்து அனுபவமாக பெற்றவற்றை மிக எளிமையாக பதிவு செய்துள்ளது சிறப்பாகும். ஒரு சமூக மக்களின் வாழ்வியல் குறித்து இயல்பான தகவல்களை தரும் நுால்.
– ஒளி