சீர்திருத்தவாதியாகவும், ஜாதி, மத, இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், இந்திய உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தவர் சுவாமி விவேகானந்தர். ஹிந்து மதத்தின் பெருமையை மீட்டு, புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியா மீது திருப்பிய வீரத்துறவி. உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும், 300 ஆண்டுகளில் எவரும் செய்ய முடியாததை தனி மனிதராகச் சாதித்துக் காட்டியவர்.
குருதேவர் ராமகிருஷ்ணர் புகழை அகிலம் உணரச் செய்தவர். சுவாமி விவேகானந்தரின் இளமைக் காலம், ஸ்ரீபரமஹம்சரிடம் பெற்ற அனுபவங்கள், உலகில் ஹிந்து மதத்தின் அருமை, பெருமைகளை உணர்த்திய விதம், ஏழை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆற்றிய தொண்டு போன்றவற்றை தெளிவாக விளக்கி இருக்கிறார். படிப்போர் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலை உணர்ந்து, அதன் வழி நடக்க முயற்சி செய்வர் என்பது திண்ணம்.
– இளங்கோவன்