சவுராஷ்டிர மக்களின் கோத்திரம் குடும்பப் பெயர் அகராதி என்று 10 தலைப்புகளில் விரிவாக விளக்கும் நுால். கள ஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 ஊர்களில் சவுராஷ்டிர சமூக மக்கள் குடும்பப் பெயர்கள் அனைத்தும் நுாலில் இடம் பெற்றுள்ளன. கோத்திர ரிஷிகளின் வரலாறு, சவுராஷ்டிர சமூக சிறப்பு தகவல்களும் திரட்டி தரப்பட்டுள்ளன. 64 ரிஷிகளின் கோத்திரங்கள் பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.
பிராமணர்களுக்கும், சவுராஷ்டிரர்களுக்கும் பொதுவான கோத்திரங்கள் உள்ளன. பாரத்வாஜ, கவுண்டின்ய, சாண்டில்ய, காஸ்யப, பார்கவ என்பனவையாகும். சவுராஷ்டிர சமூகத்தில் காணப்படும் கோத்திரம், பட்டப் பெயர், ஊர்கள், பிற விபரங்களை அகர வரிசைப்படி தருகிறது. மதுரையில் சவுராஷ்டிர சமூக விடுதிகளில், திருமணம் நான்கு நாட்கள் நடக்கும். கல்யாண வீட்டின் சுவர் மீது, குல கோத்திர ரிஷி தேரில் அமர்ந்து வரும் காட்சி செம்மண்ணில் வரையப்பட்டிருக்கும். தமிழகத்தில் வாழும் சவுராஷ்டிர மக்கள் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்