மின்சாரத் துறையில் பணிபுரிபவர் பாதுகாப்பு குறித்த பாடல்களின் தொகுப்பு நுால். ஒரு பாடலில், ‘விபத்துக்கு காரணம் கவனக்குறைவு; விழிப்புடன் பணி செய்தால் மன நிறைவு’ என, சின்ன சின்ன சொற்களில் ஆழமான கருத்து வளம் வெளிப்பட்டுள்ளது.
‘ஒருவருக்கு பணி இடமே கோவிலாகும் என்றும், செய்தொழிலே தெய்வம் ஆகும்’ என்றும், செய்யும் இடமே கோவில் என்றும் ஒரு கவிதையில் சொல்லப்பட்டுள்ளது. பாடல்களில் கருத்து வளம் மிகுந்து உள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கு நல்ல கையேடாக உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்