குடும்பத்தில் மூத்த பெண்கள், அந்தக் காலத்தில் மற்ற எல்லாரையும் போல் பள்ளிக்கு செல்ல முடியாது. வீட்டு வேலைகளை கவனிக்க வேண்டும் என்ற வருத்தத்தை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல்.
கணவரை இழந்த ஏழைப் பெண்ணுக்கு மகன், மகள் உள்ளனர். பெண்ணுக்கு சிறுவயதாக இருந்த போது, தாய்க்கு புற்றுநோய் வந்து இறக்க நேரிடுகிறது. பின், தன்னுடைய இரு தம்பிகளை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தது.
அந்த நேரத்தில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள, மனைவியின் தங்கையை பெண்ணின் தந்தை மறுமணம் செய்கிறார். பின், சித்தியின் கொடுமையால் தவிக்கிறாள். இப்படி பிறந்தது முதல் இந்த பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது. திருமணம் செய்த பின், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறக்கிறது.
அவர்களை கண்ணும் கருத்துமாக நல்ல வழியில் வளர்க்கிறாள். பிள்ளைகளும் இவளது சொற்படி நடக்கின்றனர். மகளை நன்றாக படிக்க வைக்கிறாள். இப்படி சுபமாக முடிகிறது நாவல். பெண்களுக்கு கல்வி அவசியமானது என்பதை அறிவுறுத்தும் நுால்.
– முகில் குமரன்