மகாகவி பாரதியாரின் பன்முக நோக்கு கொண்ட கதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நுால். நாட்டுப்புற கதை கூறும் மரபையும், நாடகக் கலை உத்தியையும் பயன்படுத்தி உள்ளார். பாஞ்சாலி சபதம் போன்றவை இதில் அடங்கும். குறுநாவல், நீண்ட கதைகள், சிறிய கதைகளையும் எழுதியுள்ளார். அவற்றில் நேரில் கண்ட மாந்தர்களையே பாத்திரங்களாக மாற்றியுள்ளார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதை சொல்லும் மரபு குறித்து முதலில் விளக்கி, 27 தலைப்புகளில் கூற வந்த கருத்தை விளக்கியுள்ளார். குறிப்பாக, ‘கதைக்குள் கதை’ அமைத்துள்ள பாரதியாரின் திறன் கூறப்பட்டுள்ளது.
ஏழைகள் பற்றிய எழுதிய கதைகள் அக்காலத்தில் பிரபலம். கணவன், மனைவி குறித்த கதைகளையும் படைத்துள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து கிளை கதைகள் இயற்றியதையும் விவரித்துள்ளது. எந்த நோக்கில் கதை கூறினாலும், அதிலிருந்து ஒரு சமூக பிரச்னையை விளக்கியுள்ளதை ஆய்வு செய்துள்ளது. பாரதியாரின் ராஜா கதை, பறவைகள் கதை, விலங்குகள் கதை போன்றவற்றைப் பற்றிய ஆய்வுகளும் உள்ளன. பாரதியார் கதைகளின் பன்முகத் தன்மை குறித்து அறிய உதவும் நுால்.
– முகில் குமரன்