கம்பராமாயணத்தில் 17 பாடல்களில் இடம் பெற்றுள்ள பேரழகி அகலிகை குறித்த நுால். குறுங்காப்பியம் போல் சிறப்பாக சந்த ஓசை நயத்துடன் பாக்களால் வடிக்கப்பட்டுள்ளது.
பெண்ணுக்கு அநீதி அந்தக் காலம் முதல் தொடர்கிறதே என்ற ஆற்றாமை நுால் முழுதும் கொப்பளிக்கிறது. ஒரு குறுங்காப்பியம் அல்ல பெருங்காப்பியமாக திகழ்கிறது. பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். – சீத்தலைச் சாத்தன்