இசை உலகில் 50 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறப்பவர் வாணி ஜெயராம். ‘பழநி முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்ததால, வளர வளர தேன் மாதிரி குரல் இருக்கப் போறது... சங்கீதத்தில் சாதனை பண்ணும் இந்த குழந்தை’ என கணிக்கப்பட்டவர்.
சிறு வயதிலே கர்நாடக சங்கீதம், மெல்லிசையில் இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். இவர் முதலில் கால் பதித்தது, ஹிந்தி மற்றும் ஹிந்துஸ்தானியில் தான். தமிழில், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ என்ற பாடல் வாயிலாக பிரபலமாகி தேசிய விருது பெற்றார்.
தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும், தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதையும் பெற்றார். கர்நாடக சங்கீதம், திரை இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் என மூன்று தளங்களில் பயணித்த ஒரே பாடகி. இசை மட்டுமல்லாமல் ஓவியம், கவிதை என இதர கலைகளிலும் பங்காற்றியவர். இவரைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் கொண்ட புத்தகம்.
– இளங்கோவன்