பெருநோயாகக் கருதப்பட்ட எயிட்ஸ் வந்த கணவனையும், தன்னையும் ஒரு பெண் எவ்வாறு தாங்கிக் கொண்டாள். கணவனை இழந்த பின்னும் தன் குழந்தையோடு எவ்வாறு வாழ்வைத் தொடர்ந்தாள் என்பதை மையமாகக் கொண்டமைந்த நாவல்.
கொரோனா பெருந்தொற்றை விட அதிகமாக அச்ச உணர்வு ஏற்படுத்திய வைரஸ் கிருமி எச்.ஐ.வி., நாவலில் நாயகி, கணவனிடமிருந்து எச்.ஐ.வி., கிருமியை பெற்றுக் கொள்கிறாள். அதனால் ஏற்படும் பாதிப்பு, குடும்பத்தில் எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புலப்படுத்துகிறது.
சமூகத்தில் விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவையை கற்றுத் தரும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்