லெமூரியா கண்ட சான்றுகள் மற்றும் தமிழகத்தின் தொன்மக் கூறுகளைத் தொகுத்துத் தரும் வரலாற்று நுால். தொன்மை மனிதனின் உடல் வளர்ச்சி, கற்காலக் கருவிகள், பண்டைக்கால உலக வரைபடங்கள், இந்திய அகன்ற நிலப்பரப்பின் வரைபடங்கள், அக்காலத் தட்ப வெப்பச் சூழல்கள், இயற்கை வளங்கள், உயிரினங்களின் வாழ்க்கை முறை, பழமையான தமிழர் நாகரிகச் சான்றுகளின் படங்கள், தமிழர் நாகரிகச் சான்றுகள், உணவு முறைகள் தரப்பட்டுள்ளன.
வெவ்வேறு காலங்களில் தமிழின் வகைப்பாடுகளின் பட்டியலைத் தந்துள்ளது. தமிழகத் தொன்மையை நிலைப்படுத்தும் தொல்லியல் சான்றுகளின் காலக் குறிப்புகளைத் தந்து, எழுத்துக்கள், நாணயம், விலங்குகள், ஓவியங்கள், அடையாளங்கள் பற்றிய அண்மைக்காலச் செய்தித் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களின் கண்டுபிடிப்புகள், வழிபாட்டு முறைகள், மொஹஞ்சதோராவில் கிட்டிய எழுத்து வடிவங்கள், மெசபடோமியா, பாபிலோனியா எகிப்துடனான தென்னிந்தியத் தொடர்பு போன்ற தகவல்கள் உள்ளன. பண்டைய மாந்தரின் தோற்றம் மற்றும் வளர்ச்சிகளை விளக்குகிறது.
உள்ளடக்கங்களுக்கான சான்று அடிக்குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. கீழடி போன்றே ஆத்திரம்பாக்கம் போன்ற களங்களுக்கு, தொல்லியல் ஆய்வில் முக்கியத்துவம் தரப்படாதது குறிப்பிடப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு