சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ள எண் கணிதம் பற்றி கூறப்பட்டுள்ள நுால். இந்தியக் கணிதத்தை இனிதே அறிமுகம் செய்கிறது. கடினமான கணித முறைகளை எளிமையாக விளக்குகிறது. இந்தியக் கணித வரலாற்றைக் காட்டுகிறது. வேதக் கணிதத்தையும் விவரிக்கிறது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது தமிழில் பிரசுரமாகியுள்ளது.
கணிதத்தின் வரலாறு, இந்திய கணித ஆய்வாளர்கள், சமஸ்கிருதத்தில் எண்களின் பிரதிநிதித்துவம், கடபயாதி, ஸங்கியை, பூத ஸங்கியை எனும் ரகசிய முறை, ஸங்கியைகளின் பயன்பாடுகள், வேதக் கணிதம், இந்தியக் கணித மேதைகள், மேளகர்த்தா ராகங்கள் போன்ற தலைப்புகளில் அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஸம்ஹிதை என்பது தெய்வங்களுக்கான பிரார்த்தனை. பிராஹ்மணம் என்பது யாகங்கள் செய்யும் முறை. யசுர்வேத ஸம்ஹிதையில் எண்கள் உள்ளன. ஒன்றில் பதினாறு பின்னம் கலா எனவும், தல்லட்சணம் எனும் எண் 1,053 கோடானு கோடியாகவும் காட்டப்பட்டுள்ளது. கூட்டல், கழித்தல், பெருக்கல், பின்னங்கள், சதுரங்கள், கணங்கள் மற்றும் வர்க்க மூலங்கள் போன்ற எண் கணித செயல்பாடுகளை கூறியுள்ளார் வேத வியாசர்.
பாணினியின் விஞ்ஞானக் குறியீடுகள், பிற்கால கணிதவியல் ஆய்வாளர்களுக்கு, இயற்கணித சமன்பாடுகளை வகைப்படுத்த உதவும் வகையில் அமைந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்