திருமூலர் இயற்றிய பாடல்களை பதம் பிரித்து, பொருளுணரும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு கட்டுரையிலும் திருமந்திரப் பாடல் விளக்கமாக தரப்பட்டுள்ளது. திருமூலர் வரலாறும் கூறப்பட்டுள்ளது.
திருமந்திரத்தில் அறம், தத்துவம், சமயம், அட்டாங்க யோகம், இறைவன் இயல்பு, சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் மற்றும் குரு நெறிக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இல்லறத்தில் ஈடுபட்டோருக்கு உதவக் கூடிய பாடல்கள் தனியாக விளக்கப்பட்டுள்ளன.
இறைவன் கருணை மிக்கவன் என்ற பக்தி நிலைக்கு இழுத்துச் செல்லும். பதி, பசு, பாசம் திருமந்திரப் பாடல் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. பக்திக் கடலில் மூழ்கி முத்து தரும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்