கொல்கத்தா மாநகரில் பயணம் செய்ததை விவரிக்கும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். டாக்சி ஓட்டுனர்களில், 99 சதவீதம் பேர் காலை நேரத்தில் மீட்டர் போட்டு ஓட்டுவதாக பதிவாகி உள்ளது.
மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்க, மலிவான மண்குவளையில் தேநீர் வழங்குவது குறித்த தகவல், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை நினைவூட்டுகிறது. ஆட்டோ பயணம், சில நேரம் திருப்பங்களில் வேகம் குறையாமல், மரண பயத்தை காட்டும் என்கிறார். லுங்கியை மடித்து கட்டுவது போல், மேல் சட்டையை மடித்து கட்டும் ரிக் ஷா தொழிலாளர்களின் இயல்பை, நெருடல் இல்லாமல் விவரிக்கிறார்.
மீன் உணவு, ரசகுல்லா இனிப்பு போன்றவற்றை சுவைபட விவரிக்கிறார். வற்றாத ஜீவ நதி, படகு பயணம் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக இருக்கிறது. கொல்கத்தாவின் ஆன்மிகமாக விளங்கும் துர்கா பூஜையின் சிறப்புகளை கண்முன் நிறுத்துகிறார். கொல்கத்தாவின் சிறப்பை அறிய விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்