விஞ்ஞானத்தைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய மர்ம நாவல். பரம்பரை நோய்களை குணமாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடும் டாக்டர் அபூர்வன், மனிதர்களின் குரோமோசோம்களில் மாற்றம் செய்வது என்ற வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
உயிரியல் விஞ்ஞானி குருமூர்த்தி, இவரைச் சந்தித்து தகவல்களை பரிமாறிக் கொள்வதாக நாவல் சூடுபிடிக்கிறது. குருமூர்த்தியின் நண்பர்களை கொலை செய்ய நடக்கும் முயற்சியை கண்டு மயங்கி விழுந்து நினைவுகளை மறக்கிறார்.
கொலை முயற்சி உள்ளிட்டவற்றை துப்பறியும் குழு ரகசியமாக விசாரித்து வருகிறது. இறுதியில், கோவில் விழாவில் கொலை முயற்சி தோல்வியடைவதுடன் விறுவிறுப்பாக முடிகிறது நாவல். இடையில் கிளைக் கதைகள் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும் வருகின்றன. இடையில் இலங்கைத் தமிழும் வருகிறது.
ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பல வழிகளில் பயணித்து, சுவாரசியம் குறையாமல் முடிகிறது. ஆங்கில வார்த்தைகளும், பேச்சு வழக்கும் கலந்து வருகின்றன. நாவல் பிரியர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ள நுால்.
– முகில் குமரன்