முல்லைப் பதிப்பக நிறுவனர் முல்லை முத்தையாவின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள நுாற்றாண்டு மலர். பதிப்புத் துறை, எழுத்துத் துறையில் முத்திரை பதித்தவர். 300க்கும் மேற்பட்ட நுால்களைத் தொகுத்தும், மொழிபெயர்த்தும், எழுதியும் உள்ளார். பாரதிதாசன் கவிதைகளை வெளியிடுவதற்காகவே பதிப்பகத்தைத் துவங்கியவர்.
அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களுடனும், பாரதிதாசன், தி.ரு.வி.க., மறைமலையடிகள், கொத்தமங்கலம் சுப்பு, புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற பிரபலமானவர்களிடமும் நெருங்கிப் பழகியவர்.
இவரது பன்முகத் திறனைப் பாராட்டி, அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள், வாழ்த்து மடல்கள், கட்டுரைகள் மட்டுமின்றி நாளிதழ்களின் பாராட்டுச் செய்திகளும் மலரில் இடம் பெற்றுள்ளன.
– புலவர் சு.மதியழகன்