மனக்கிடக்கையில் மண்டிக்கிடக்கும் கவித்துவம் பேச்சாய், மூச்சாய், பொருள் வீச்சாய் எழுதலே ஓர் உண்மைக் கவிஞனின் உயிர்ப்பும், துடிப்புமாய் அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
முதல் மூன்று கவிதைகள் ,‘வெற்றியை அருளும் விநாயகனே! திருத்தணி முருகா போற்றுகிறேன்! அனுமானஞ்சலி’ என்ற தலைப்புடன் பக்தியுடன் போற்றும் வகையில் அமையப் பெற்றது தனிச்சிறப்பு.
தொடர்ந்து, ‘உப்புக்கல் வைரம்’ என்ற தொகுப்பில் வாய்ச்சொல் வீரரை வகைப்படுத்தி விட்டு, முடிவில் வேலையற்ற வீணரின் வீண்பேச்சை கேட்காதீர், ஊக்கமுடன் ஆக்கத்தை உழைப்பால் அடைந்திடுவீர் என்று முடித்திருப்பது சிறப்பு.
– வி.விஷ்வா