நல்ல புத்தகங்கள் தான் வாழ்வை செம்மைப்படுத்துகின்றன என்கிற மாதிரியான 20 எழுச்சிமிக்க கட்டுரைகளை தொகுப்பாக கொண்டுள்ள நுால். ‘தன்னம்பிக்கை விளம்பரம் தேடுவது இல்லை... தலைக்கனம் விளம்பரத்தை விடுவதே இல்லை’ போன்றவை, எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய வாசகம்.
உழைப்பு என்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல அடுத்தவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும், பெறுவதும் மிக அவசியம். மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது, ஜான் ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற புத்தகம் என்பது போன்ற கருத்துகளை விளக்குகிறது.
வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள் அங்கங்கே விதைக்கப்பட்டுள்ளன. வளரும் சமுதாயம் அவசியம் படித்து உணர வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்