கான்சாகிப், மதுரநாயகம், யூசுப்கான், கம்மந்தான், சிக்கந்தர் சாகிப் என பற்பல பெயர்களால் அழைக்கப்பட்ட மருதநாயகம் குறித்த பகுப்பாய்வின் தொகுப்பே இந்தப் புத்தகம். மருதநாயகம் என அறியப்பட்ட இவரின் பூர்வீகம், பெற்றோர், மதம், இயற்பெயர், தொழில், பங்கெடுத்த போர்கள், வீழ்ந்த விதம் போன்ற கேள்விகளுக்கு, பலரும் அளித்துள்ள பதில்களை அலசுவதோடு, அன்றைய காலச்சூழல், ஆட்சி முறை மற்றும் போர்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
மருதநாயகம் தியாகியா, துரோகியா என துவங்கி, அவரது போர் தந்திரம், துணிச்சல், காதல் திருமணம், அலங்கரித்த பொறுப்புகள், பூலித்தேவர், அழகுமுத்துக்கோன் போன்றோருடனான உறவு, ஆங்கிலேயேருக்கு எதிராக திரும்பக் காரணம் போன்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
மருதநாயகத்தின் நினைவை பறைசாற்றும் சாட்சிகளாக உள்ள இடங்கள், கட்டடங்கள், பாட்டுதலங்களை ஆய்வின் வழியாக அறுதியிடுகிறார். மர்மக் கதையைப் போல் சுவாரசியங்களை உள்ளடக்கிய நுால்.
– பெருந்துறையான்