மூன்று வரிப்பாடல்களில் நிறைந்த கருத்துகளை கூறும் நுால். இது போன்ற சிலவற்றில் அழுத்தமான கருத்துகள் இருக்கும். சிலவற்றில் வரிகளை மடக்கி, வார்த்தைகளைக் கோர்த்து இருப்பர்.
இந்தப் புத்தகத்தில் ஒரு பாட்டு, ‘தவளை குதித்தது... பாசிக்குளத்தில் நிலவு சுருங்கி விண்மீன் ஆகிறது... பாசி படர்ந்த குளம்... ஆனாலும் நிலவு பளிச்சென்று வட்டமாக குளத்தில் தெரியும். அந்த குளத்தில் தவளை குதித்தால் குளம் கலங்கும்... நிலவு சிதிலமடைந்து தெரியும்...’ என கற்பனை செய்யப்பட்டுள்ளது.
எலிக்கும் உணவில் பங்கு கொடுக்கும் காகத்தின் பண்பாடு பற்றியது நல்ல பாடலாக உள்ளது. மனதை கவ்வும் பாடல்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச் சாத்தன்