பாசாங்கு இன்றி எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். பெரும்பாலும் தந்தையை போற்றும் கருத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. ஒரு கவிதையில், ‘ஏழு மணி நேரக் காத்திருப்பும் தனிமையும், செத்த உடலை என்ன செய்து விடப்போகிறது’ என்ற வரிகளே கவி முகத்தைக் காட்டிவிடுகிறது. சொற்களில் பொருளை குவிக்காமல், யதார்த்த உலகை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நேரடியாக பேசி, களத்தை சுட்டிக் காட்டுகின்றன.
நுண்ணிய உணர்வுகளுக்கும், புனைவுக்கும் உள்ள இடைவெளியில் ஊசலாட்டம் கொள்கின்றன. நடுவான மனநிலையில் பயணம் செய்ய ஏதுவான கவிதைகளின் தொகுப்பு நுால்.
– மலர்