திரைப்படங்களில் இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராக ஜொலித்த ஏ.எம்.ராஜா – ஜிக்கி தம்பதி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆவணமாக மலர்ந்துள்ளது.
தேன்மதுர குரலால், சினிமாவில் இசையமைப்பு மற்றும் பின்னணி பாடல்கள் என புகழ் பெற்று விளங்கியவர்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளை தனித்தனி கட்டுரைகளாக தருகிறது. குடும்ப பின்னணி, இளமைக்கால வாழ்க்கை, கல்வி, இசை சார்ந்த ஆர்வம், சினிமா உலக பயணம் என தகவல்களைக் கொண்டுள்ளது.
தொடர்ந்து, இவர்களின் சந்திப்பு, திருமண வாழ்வு என விபரங்களைக் கொண்டுள்ளது. இசையமைத்து பாடிய படங்கள், பாடல்கள், உடன் பாடியவர்கள், அந்த பாடலுக்கு கதா பாத்திரங்களில் நடித்த நடிகர் – நடிகையர், படம் வெளிவந்த ஆண்டு என திரைப்படம் சார்ந்த தகவல்களை தந்துள்ளது.
புத்தகத்தின் இறுதியில், ஏ.எம்.ராஜா – ஜிக்கியின் குடும்ப புகைப்பட ஆல்பம் உள்ளது. தென்னிந்திய திரைப்பட பின்னணி இசை குறித்த வரலாற்றின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ள நுால்.
– ராம்