வரலாறு, இலக்கியம், அகழ்வாராய்ச்சி கல்வெட்டுகள் வழியாக, தமிழக நாகரிகத்தை அறிய முடியும் என்பதை கூறும் நுால். மொத்தம், 20 ஊர்களில் நடந்த ஆராய்ச்சிகளை விவரிக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம், இந்தியா, இலங்கை முழுதும் பரவி இருந்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சி உறுதிப்படுத்தியதை அறிய முடிகிறது. இந்திய பண்பாட்டு நாகரிகம், திராவிட பண்பாட்டின் அடிப்படை என கூறுகிறது.
தமிழர் வரலாற்றை, சங்க கால இலக்கியம், தொல்காப்பியம் வழியாக தெரியப்படுத்துகிறது. இதற்கு, தொல்லியல் ஆய்வுகள் முக்கிய பங்காற்றியதை கூறுகிறது. கீழடி, ஆதிச்சநல்லுாரில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியை துல்லியமாக விளக்குகிறது.
கொற்கையில் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்துள்ளன. மயிலாடும்பாறையில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வாள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழக வரலாறு, தொல்லியல் ஆராய்ச்சி குறித்து அறிய விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்