‘மனமே விழித்தெழு’ வாயிலாக நம் மனதை மட்டுமல்ல; அதனுடன் முடங்கிக் கிடக்கும் நம் உடலையும் முன்னேற்றப் பாதை நோக்கி எழுந்தோடச் செய்திருக்கிறார் நுாலாசிரியர். பாரதியாரின் வரிகளால் துாண்டப்பட்டு, 26 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நுாலை படைத்திருக்கிறார்.
குறிக்கோளை அடைய மனதிற்கு தேவையான நல்ல சக்திகளையும், மனதை முடக்கிப் போடும் தீய சக்திகளையும் குட்டிக் கதைகள், பாடல் வரிகள், திருக்குறளால் விளக்கியுள்ளார். புத்தகங்களில் படித்ததை, இலக்கை அடைய அறிஞர்கள் கையாண்ட சூட்சுமங்களை ஆங்காங்கே இடைச்செருகி தன்னம்பிக்கை தந்துள்ளார்.
குறிக்கோள் இல்லாதவர்கள், இருந்தும் அதை சேர முயலாதவர்கள், முயன்றும் தோற்பவர்களுக்கு வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டுகிறது, மனமே விழித்தெழு புத்தகம். குறிக்கோளை அடைய மட்டுமின்றி, சமூகத்தில் நல்ல மனிதனாக வாழவும் அறிவுரை வழங்குகிறது. துவண்டு போன மனங்கள் புது சக்தி பெற்று விழித்தெழ வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
– தமிழ்நாடன்