ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் வாழ்க்கை வரலாற்று நுால். கிராமத்தில் படித்து முன்னேறி முன்னுதாரணமாய் திகழ்வதாக குறிப்பிடுகிறது. தொடர்பில்லாத அரசு துறைகளாக இருந்தாலும் நிர்வாகத் திறமையைக் காட்டி வெற்றி பெற்றதை காட்டுகிறது. மதுரையில் துணை ஆட்சியர் பயிற்சி, தேர்தல் நடத்துவது தொடர்பான பணி அனுபவம், தஞ்சாவூர், சிதம்பரத்தில் கோட்டாட்சியர் பணி அனுபவம் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் திருமணம் பற்றியும் பகிரப்பட்டுள்ளது.
சென்னையில் பணியாற்றியது, சேலம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றது போன்ற நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன. ஓய்வுக்கு பின் அரசியல், ஆன்மிகப் பணி குறித்தும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 39 தலைப்புகளில் வாழ்க்கை வரலாற்றை பட்டியலிட்டு பதிவு செய்துள்ளது. புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிகார பணிகளுக்கு செல்ல விரும்புவோர் படிக்க வேண்டிய நுால்.
– முகில் குமரன்