புகழ்பெற்ற உளவியலாளர்களின் ஆளுமைக் கருத்தியல்களை எளிய நடையில் முன்வைக்கும் நுால். சமூகத்தில் பல்வேறு வகையினரைப் பட்டியலிட்டு, மிகைப்பட்ட வெளிப்பாடுகள், எண்ணங்கள், அணுகுமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரே குறிக்கோளில் பயணிப்பவர்களும், ஆளுமையின் வேறுபாட்டால் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படையை அலசுகிறது. குழந்தையின் உடல், மன வளர்ச்சியில் தாய், தந்தை பங்களிப்புகளில் வேறுபாடு, ஆளுமை உருவாக்கத்தில் பெற்றோர் பங்களிப்பை குறிப்பிட்டு, சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளும் இயல்பு விளக்கப்பட்டுள்ளது.
அரசியல், இலக்கியம், திரைத் துறையில் நிலவும் கதாநாயக வழிபாடு, குறிப்பிட்டவர்கள் மீதான இயல்பான விருப்பு வெறுப்புகள், சிலரால் கவரப்படுவதற்கான காரணங்கள் போன்றவை உளவியல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன. பரவலான புரிதல் கருதி ஆங்கிலச் சொற்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன. உயரத் துடிக்கும் இளைஞர்களுக்கு பயன் தரவல்ல நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு