எண்ணங்களால் வடிவமைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மழை எல்லா காலங்களிலும் மனதில் மகிழ்ச்சி சலனமாகவும், துயர் சலனமாகவும் கிளர்ந்தபடி இருக்கிறது. பொருளாதாரத் தன்னிறைவுக்கு முன்பும், பின்பும் வீட்டின் அமைப்பு மாறிக் கொண்டே இருக்கும்.
மழையை, மனங்கோர்த்துக் கொண்டாடுவதாகவும், பற்றிக் கொண்ட கரங்களை உதறுவதாகவும், சில சமயம் வருத்தத்தோடு கவனிப்பதாகவும் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிந்திக்கத் துாண்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். – வி.விஷ்வா