அரசியல் சார்ந்த வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்யும் சுயசரிதை போன்ற நுால். அண்ணாதுரை நடத்திய நாடகத்தில் பங்கேற்றது, நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அண்ணாதுரைக்கு ஏற்பட்ட வருத்தம், தி.மு.க.,விலிருந்து கவிஞர் கண்ணதாசன் வெளியேறிய நிகழ்வு போன்றவை சுவாரசியமாக தரப்பட்டுள்ளன.
அண்ணாதுரை மறைவுக்குப் பின், கருணாநிதியை முதல்வர் ஆக்கிய போது நடந்த கருத்து மோதல்கள், சினிமா தயாரிப்பு, அதில் கிடைத்த வெற்றி மற்றும் வருமானம், திரைப்பட தயாரிப்பால் ஏற்பட்ட நஷ்டம் என பல அனுபவ தகவல்களை கொண்டு உள்ளது.
தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கிய போது நடந்த நிகழ்வுகள், மிசா காலத்திய சம்பவங்கள் என நிரல்படுத்தப்பட்டுள்ளன. திராவிட இயக்கங்கள் பற்றியும், தலைவர்களின் நிலைப்பாடு பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்