சமுதாய அக்கறையோடு எழுதப்பட்ட மரபுக் கவிதைகளின் தொகுப்பு நுால். யாதுமாகி நின்றாள் தேவி என்று தொடங்கி, ஆன்ரூ அடிகளார் ஆல் போல வாழி என, 96 தலைப்புகளில் பல கருத்துக்களை பேசுகிறது. பெண்மை, தாய்மையை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதைகள், பயனுள்ள கருத்துகளைக் கூறுகின்றன.
உழவுத் தொழிலின் மேன்மை, உழைப்பின் சிறப்பை சொல்கிறது. குடி குடியைக் கெடுக்கும் என்ற தலைப்பில் அமைந்த கவிதை, குடிகாரன் தன்னை மறந்த நிலையை விவரிக்கிறது. குடியால் வரும் கேட்டை சுட்டிக்காட்டுகிறது. திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்ற பழந்தமிழ் இலக்கிய கருத்துகள், நுாலில் வலம் வருகின்றன.
கவிதை எழுத முயல்வோருக்குப் பெரிதும் உதவும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்