ஊரகப் பகுதிகளில் வாழும் பாமர மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்கள் பற்றி விளக்கமாக கூறும் நுால். மதுரை வீரன், காத்தவராயன், சுடலைமாடன், பொன்னர் சங்கர் போன்ற காவல் தெய்வங்கள் பற்றி வட்டார வழக்கில் நாட்டுப்புற இலக்கியங்கள் பல உள்ளன.
முப்பதுக்கு மேற்பட்ட காவல் தெய்வங்கள் பற்றிய வரலாறு, அமைவிடம், வழிபாட்டு முறைகள், நடைபெறும் திருவிழாக்கள், பெயர்க் காரணம் பற்றி விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. கபாலீஸ்வரர் மயிலைக்கு இடம் பெயர்ந்த நிகழ்வும், தமிழக தலைமை செயலகமான ஜார்ஜ் கேட்டைக்குள், சென்னம்மாவாக இருந்த தேவதை, சென்னை தம்புசெட்டித் தெருவில் காளிகாம்பாளாக அருள் பாலிப்பதும், வீர சிவாஜி வழிபட்ட நிகழ்வும் சுட்டப்பட்டுள்ளன.
கிராம தேவதைகளுக்கு உயிர் பலி கொடுக்கும் வழக்கம் மற்றும் வினோத வழிபாட்டு முறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கிராம தேவதைகளின் வரலாற்று நுால்.
– புலவர் சு.மதியழகன்