சுதந்திரத்திற்கு பின், தமிழகத்தில் முதல்வராக இருந்த ராமசாமி முதல் ஸ்டாலின் வரை, 13 முதல்வர்கள் குறித்து அலசும் நுால். தலைவர்களின் பிறந்த ஊர், பள்ளி பருவம், குடும்ப சூழல், நாட்டுப்பற்று, அரசியல் பிரவேசம் என, வாழ்க்கையை விவரிக்கிறது.
தேவதாசி முறையை ஒழித்த ராமசாமி, மதுவிலக்கு தடை ஏற்படுத்திய குமாரசாமிராஜா, விற்பனை வரியை அறிமுகப்படுத்திய ராஜாஜி போன்றோரின் செயல் திட்டங்களை பேசுகிறது. ஐ.ஐ.டி., மின் திட்டம், அணைகள் கட்ட திட்டங்கள் கொண்டு வந்தார் காமராஜர்; அவர் இறுதி காலம் வரை வாடகை வீட்டில் இருந்ததை சொல்கிறது. அண்ணாதுரையின் பேச்சு, ஆட்சி திறனை விவரிக்கிறது.
கருணாநிதியின் மேடை பேச்சு, சினிமா, அரசியல் பற்றி கூறுகிறது. எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த சூழல், ஆட்சிக் காலத்தை அலசுகிறது. குறுகிய காலம் ஆட்சி செய்த ஜானகி பற்றியும் சொல்கிறது. ஜெயலலிதா வாழ்க்கையையும் விவரிக்கிறது.
– டி.எஸ்.ராயன்