மொழி, இனம், சமுதாயம், கல்வி, காதல் என எல்லாப் பொருண்மைகளிலும் மிக அழகான பாடல்களை மாலைகளாகத் தொடுத்துள்ள நுால். இன்றைய சமுதாய நிலை குறித்த எண்ண வெளிப்பாடும், கடுஞ்சினமும் நுால் முழுமையும் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளில், ‘கல்லாதார் நெஞ்சத்தைப் பொல்லாதார் துாண்டுகிறார்’ போன்ற வரிகளில் கவிஞரின் குமுறல் வெளிப்பாட்டை உணர முடிகிறது.
மெல்லிய உணர்வுகள் கொட்டிக் கிடக்கும் காதல் கவிதைகளும், மொழிப்பற்றை ஊட்டி வளர்க்கும் தமிழ் மீதான காதல் கவிதைகளும் உள்ளன. நாட்டுப்பற்றைப் புலப்படுத்தும் விருத்தப்பாக்களும், நீதி நெறியை உணர்த்தும் குறட்பாக்களும் நிறைந்த நுால்.
– புலவர் சு.மதியழகன்