ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் சுய வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். இரண்டு பாகங்களாக ஆங்கிலத்தில் உள்ளது. முதல் பாகம், இளமைப் பருவம் முதல் கடந்து வந்த கடின சூழல்களை ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டியுள்ளது. போதிய பணம் இன்றி தவித்த போதும், ஒவ்வொரு கட்டத்திலும் மேம்பாட்டுக்குத் தந்தையே வழிகாட்டியாக இருந்ததைப் பெருமிதமாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நல்லொழுக்கம், மதிப்பெண், விளையாட்டு, பொழுதுபோக்கு என இடைவிடாமல் கவனம் செலுத்தியது பதிவாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரி வகுப்புகளில் ஏற்பட்ட மகிழ்ச்சி, துன்பம் கலந்த நிகழ்வுகள், காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளன.
கல்வி ஊக்கத்தொகை உதவியுடன் மேல்படிப்பு முடித்ததை நன்றியோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வாகியது முதல், அதில் ஏற்பட்ட சிக்கல்கள், இழப்புகள், பெருமிதங்களை விவரிக்கிறது.
பணியாற்றிய துறைகளில் சார்பு மனப்பான்மை, எதிர்கொண்ட இடர்கள், வலிகள் என ஒவ்வொரு நகர்வும் பதிவாகியுள்ளது. அலுவல் தொடர்பாக அப்போதைய பிரதமர்கள் இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ் மற்றும் ஜோதிபாசு, அப்துல் கலாம் போன்ற தலைவர்களை சந்தித்த அனுபவங்களும் பதிவாகி உள்ளன. வாழ்வில் முக்கிய பொறுப்புகளில் அமரவிரும்புவோருக்கு வழிகாட்டும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு