தொன்மை மிக்க நாடகக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து விவரிக்கும் நுால். தமிழ் நாடகத்தின் தொன்மை, தோற்றம், வீழ்ச்சி, மறுமலர்ச்சி, தற்கால நாடகங்கள் என முறையாக வகுத்து கூறப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற் கலைஞர், சுந்தரனார் பற்றியும், அவர்கள் நாடகத்திற்கு செய்த பங்களிப்புகள் குறித்தும் விவரிக்கப்பட்டு உள்ளது.
திராவிட இயக்க நாடகங்கள், தற்கால நாடக வளர்ச்சி என செய்திகளைக் கூறுகிறது. நாடகங்கள் வளர்ச்சிக்கு பங்கு வகிக்கும் சபாக்கள் எப்போது உருவாகின... நாடகக்கலை வளர்ச்சியில் இவற்றின் பங்கு என்ன... என்னென்ன சபாக்கள் இருந்தன... இப்போது உள்ள சபாக்கள் என்பது போன்ற செய்திகளும் உள்ளன.
இலங்கையில் தமிழ் நாடகத்தின் தாக்கமும் விவரிக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் தோற்றம் முதல், தற்காலம் வரை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்