புதுப் பாடல்களையும், கவிதைகளையும் தொகுத்து தரும் நுால். ஒரு கவிதை, ‘தாவரம் அதில் இலை... இலைகளில் காற்று மோத... இலை அசைகிறது... அசைத்ததால், காற்று இலைக்கு சொந்தம் கொள்ள முடியுமா...’ என இனிமையாக கேட்கிறது.
மற்றொன்று, ‘காதலி கடித்துப் போட்ட ஆப்பிளில், ஆயிரம் எறும்புகள் மொய்க்கின்றன என்றால், அவை அவளின் முன்பிறவி காதலர்கள்...’ என்று சுவாரசியம் கூட்டுகிறது. இப்படி எல்லாம் சந்தேகம் வருமா என, யோசித்து யோசித்து படிக்க தகுந்த பாடல்களின் தொகுப்பு நுால். – சீத்தலைச் சாத்தன்