பாரம்பரிய முறைப்படியும், நவீன கணித முறைப்படியும் கீபோர்டில் இசை அமைப்பதற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். இசை என்பது பொருந்துதல், ஒத்து சேர்தல், உண்டு பண்ணுதல், கட்டுதல், ஒத்தல், இசைவு, ஒலித்தல், ஓசை, ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகான ஒலி, இசைய வைப்பது என பல பொருள்களில் அமைகிறது.
அனைத்து உயிரினங்களையும் இசைய வைப்பதாக கூறுகிறது. சங்கீதம் என்பது, செவி வழி ஆன்மாவிற்குள் சென்று இன்பம் தரும் ஓசை. நரம்புக் கருவி, தோல் கருவி, காற்றுக் கருவி என ஒலிகளை கீபோர்டில் எளிமையாகக் கொண்டு வர பயிற்சி அளிக்கிறது.
கீபோர்டின் முக்கிய அம்சங்கள், பாகங்கள், மின் இணைப்பு, ஒலித்தேர்வு பொத்தான்கள், சமன்படுத்திகள், ஸ்ருதி நிலைப்படுத்தி, கமகம், கமகத் திருகாணி, தாளத்தேர்வு பொத்தான், தானியங்கி கூட்டு ஸ்வர விசை, வெட்டு ஸ்வர பொத்தான், அதிர்வு ஸ்வர கட்டுப்பாடு, ஒலிபெருக்கி என இசை பயிலும் சிறார்களுக்குப் பயன்படும் சிறந்த வழிகாட்டி நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்