இமயத்தைத் தலைவனாகவும், குமரியைத் தலைவியாகவும் உருவகம் செய்து, ஆண் – பெண் இடையேயான சமூக சிக்கல்கள், குறை நிறைகள் கவிதைகளாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள நுால். மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் ஊடல், சாதனை, ஆண் – பெண் முரண், வரதட்சணை என, 23 தலைப்புகளில் உள்ளன.
பகுதி இரண்டில், கடவுள், காவி, அரிச்சந்திரன், கற்பு கடவுளுக்கும் அரசருக்கும் இல்லையா, நாரதர், அகத்தியர், வியாசர், மரபு மீறல், சமூக சீரமைப்பு, மது, சூது, பரத்தமை இனிவரும் உலகம் என, 20 தலைப்புகளில் உள்ளன.
பகுதி மூன்றில் அரசியல், கற்றவரா – கயவரா, பக்தியும் கல்வியும், ஹிந்து, கிறித்தவம், இசுலாமியம், மத மாற்றம், மதங்களால் மனிதம் அழியுமா, கட்சி குளறுபடிகள், காமராசர், அண்ணாதுரை என, 19 தலைப்புகளில் பாடப்பட்டுள்ளன. அரிய கவிதைகளின் பெரிய தொகுப்பு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்