ஆகட்டும் பார்க்கலாம் என்ற சொற்களில் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பெருந்தலைவர் வரலாற்றை கூறும் நுால். வாழ்வின் சாதனைகளுடன் மறைந்தது வரை சொல்கிறது. ஒன்பது ஆண்டுகள் சுதந்திரத்துக்காக சிறைவாசம் அனுபவிப்பு. ஒன்பதரை ஆண்டுகள் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சியை தந்தது போன்ற விபரங்கள் உள்ளன.
தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கல்வியில் புரட்சி ஏற்படுத்தியது, தொழில் துறையில் நடத்திய புரட்சி பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு வித்திட்ட பட்டியல் பெரும் பிரமிப்பு தருகிறது. ஒரே வாரத்தில் சூதாட்ட தடுப்புச் சட்டம் உருவாக்கி ஒழித்தார் என்பது வியப்பு தருகிறது. இன்றைய மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்