பாரதியார் சிறுகதைகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழில் அச்சில் வந்த முதல் சிறுகதை பற்றிய சர்ச்சையை எழுப்புகிறது. பாரதியார் எழுதிய, 11 சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. சிறுகதைகளில் சிறப்பு, தற்கால மேம்பட்ட கருத்தியலுடன் பொருந்தும் விதம், அபூர்வமாக உள்ள சிந்தனை வளத்தை அறிமுகப்படுத்தும் விதமான கட்டுரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த பொறுப்புடன் அலசி ஆராய்ந்து, மகாகவி பாரதியின் ஆழ் மனக்கருத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. நுாலுக்கு முத்தாய்ப்பாக வரையப்பட்டுள்ள முன்னுரை, பாரதியின் படைப்புகள் சம காலத்தில் பின்தள்ளப்பட்டது குறித்தான விவாதப் பார்வையுடன் அமைந்துள்ளது.
மகாகவி பாரதியின் முக்கிய படைப்புகளில் ஒன்றான சிறுகதைகள் மற்றும் அவை குறித்த கருத்தாக்கத்தை மேம்பட்ட நோக்கில் அமைத்துள்ள நுால்.
– மதி