வழிபாட்டை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் கலைகள் பற்றிய விரிவான நுால். நாட்டுப்புறம், செவ்வியல் கலைஞர் இடையேயான வேறுபாடுகளை தெளிவாக தெரிவிக்கிறது. உடைகளை தேர்ந்தெடுப்பதில் உள்ள நுண் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது.
கரகாட்டம், பேயாட்டம், தப்பாட்டம், ராஜா ராணி ஆட்டம், மூக்காயி கதை, தோற்பாவைக் கூத்து, ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம் என கலைகளுக்குமான உடை வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒப்பனை என்ற சொல், ஒப்பு என்பதை அடிப்படையாகக் கொண்டு போலச் செய்யும் தன்மையை உணர்த்துகிறது எனத் தெரிவிக்கிறது. ஒருவருக்கு ஒப்பாக இன்னொருவரைக் காட்டும் கலையாக ஒப்பனையைக் காட்டியுள்ளது.
பல வகை உடைகளையும், ஒப்பனைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது. கலைகள் தொடர்பாக ஆய்வு செய்வோர் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்