சிந்து பாடல்களைச் சான்றாகக் கொண்டு, பூலித்தேவனின் வரலாற்றை ஆய்வு செய்யும் நுால். தமிழகத்தில் பாளையங்களின் தோற்றம், வரலாற்று உண்மைகள், பூலித்தேவனின் போர் முறைகள், அக்காலத்தில் நிலவிய சிந்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
நெற்கட்டான் செவ்வல், பூலித்தேவன் பெயர்க் காரணங்கள், ஆர்க்காட்டு நவாபு, கான்சாகிப் மற்றும் ஆங்கிலேயருடன் போர் செய்தமை; பூலித்தேவன் மக்கள் தொண்டு, தெய்வீகப் பணி போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பின் இணைப்புகளாக நாட்டுப்புற கதைப் பாடல்களின் வகைகள், ஒயில் ஆட்ட முறைகள், நெற்கட்டான் செவ்வல் பகுதி வரைபடம், பூலித்தேவன் கோட்டையின் படங்கள், பயன்படுத்திய போர்க் கருவிகளின் படங்கள், பூலித்தேவன் பற்றி வெளிவந்துள்ள நுால்கள், கட்டுரைகள், இதழ்கள், திரைப்படங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய விடுதலைக்கு வித்திட்டவர்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்