ஜவஹர்லால் நேரு துவங்கி, நரேந்திர மோடி வரையிலான 15 இந்திய பிரதமர்கள் குறித்த செய்திகளைக் கொண்டுள்ள தொகுப்பு நுால். பிரதமர் அமைச்சர்களை நியமிக்கவும், விலக்கவும் அதிகாரம் படைத்தவர். மக்களோடும், பார்லிமென்ட் உறுப்பினர்களோடும் நேரடியாகத் தொடர்பு வைத்திருப்பவர்.
இந்திய பிரதமர்களின் வரலாற்றைத் தேவைக்கேற்ப காலவரிசைப்படி பதிவு செய்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர், பிரதமரை உருவாக்கும் வல்லமை பெற்றிருந்ததை பதிவு செய்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போர் காலகட்டத்தில் பிரதமராக இருந்த லால்பகதுார் சாஸ்திரி செயல்பட்ட விதம் பற்றிய பதிவு சிறப்புடையது.
நெருக்கடி நிலை, இந்திரா படுகொலை, 20 அம்ச திட்டம், பசுமைப் புரட்சி, நேரு பரிசளித்த யானை, ராஜிவின் இறுதி நிமிடங்கள் போன்ற வரலாற்று நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்திய பிரதமர்கள் பற்றிய விபரத் தொகுப்பு நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்