குழந்தை வளர்ப்புக்கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பள்ளி தேர்வில், 97 சதவீதம் மதிப்பெண் எடுத்த பிறகும், 3 சதவீத மதிப்பெண்ணுக்காகக் கவலைப்படும் மனநிலையை சுட்டுகிறது. மனிதன் வளர்ந்த அளவு, வாசிக்கும் வழக்கம் வளரவில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது.
மதிப்பெண்ணுக்கு அப்பால் அறிவைத் தருவது கல்வி என்ற உணர்வை ஊட்டுகிறது. பிள்ளைகள் குறித்து திட்டமிடுதல் தேவை என்பதை தெரிவிப்பதுடன், பிள்ளைகளின் உரிமையில் தலையிடக்கூடாது எனவும் தெளிவுபடுத்துகிறது.
கற்றல் குறைபாடு பற்றிய விளக்கம் பயனுள்ள வகையில் உள்ளது. உடல் பருமனால் ஏற்படும் மன உளைச்சலை மாற்றும் வழிமுறையாக, யோகாசனத்தைத் தெரிவிக்கிறது. குழந்தைகள் பற்றிய இந்த நுால் பெரியவர்களுக்கும் உபயோகமானது.
– முகிலை ராசபாண்டியன்