கம்ப ராமாயணத்தில், ‘வாலி வதைப்படலம்’ பகுதியில், ராமன் செய்த தவறுகளையும், கம்பர் தட்டிக் கேட்டதையும் பதிவு செய்துள்ள நுால். அறத்தின் நாயகனாக போற்றப்படும் ராமன் செய்தது சரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக, கம்ப ராமாயண நிகழ்வுகள் சுட்டிக்காட்டிக் காட்டப்பட்டுள்ளன.
துவக்கத்தில், கம்பன் கவித்திறமை காட்டப்பட்டுள்ளது. அடுத்ததாக, வால்மீகியின் பார்வையில் ராமனின் குணங்கள் காட்டப்பட்டுள்ளது. பின், ராமாயணத்தில் ராமன் எந்தெந்த இடங்களில் மனித இயல்புடன் நடந்து கொண்டார் என சான்றுகள் காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறாக, ராமன் தவறிழைத்த இடங்களையும், கம்பர் தட்டிக்கேட்டதையும் பல சான்றுகளுடன் அளித்துள்ளது. ராமாயணத்தை படிக்கத் துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.
– முகில் குமரன்