சனாதன தர்மத்தை பின்பற்றும் தமிழர்கள், ஆண்டு முழுதும் கொண்டாடும் பண்டிகைகள் குறித்து விரிவாக தெரிவிக்கும் நுால். தமிழ்ப் புத்தாண்டு துவங்கி, பங்குனி உத்திரம் வரை, 30 பண்டிகைகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. இவை தவிர, ஒன்பது நிகழ்வுகள் பற்றிய விபரங்களும் உள்ளன. பண்டிகையின் முக்கியத்துவம், கொண்டாட வேண்டிய விதம், கொண்டாடும் அவசியம், கொண்டாடுவதால் ஏற்படும் பலன் பற்றி எல்லாம் சித்தரித்துள்ளது.
கொண்டாட்டங்களின் அடிப்படை தத்துவங்களையும் முன் வைக்கிறது. பருவ கால மாற்றங்கள் மற்றும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற கொண்டாட்டம், விரதம், விருந்து, தானம் பற்றிய விபரங்களையும் தருகிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. அழகிய வண்ணப் படங்களும் தரப்பட்டுள்ளன. குடும்ப ஒற்றுமை மற்றும் அறவழி வாழ்வுக்கு, கொண்டாட்ட தத்துவம் உதவுவதாக எடுத்துரைக்கிறது. பண்டிகைகளின் அடிப்படையை அறிவிக்கும் நுால்.
– ராம்