அறிவு ஜீவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் என, 26 பேர், கவிஞர் மேத்தாவின் கவிதை திறத்தை, அவரது வளர்ச்சியை, கவிதை வரிகளை அலசி ஆராய்ந்து தந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பல்வேறுபட்ட கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள் பற்றி விவரிக்கிறது. அநீதி கண்டு பொங்கும் கவிதை வரிகளையும், ஜீவனுடன் துடிக்கும் காதல் வரிகளையும் எடுத்துக் காட்டுகிறது. கவிஞரின் பாட்டில் மனித நேயத்தின் மாண்பு ஒளி விடுகிறது. ஒவ்வொரு அறிஞரும் கவிஞர் மேத்தாவை பார்க்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. மொத்தத்தில் அத்தனையும் பாராட்டு மழை தான். கட்டுரையாளரின் கருத்துக்களை ருசிக்கலாம்.
– சீத்தலைச் சாத்தன்