மூன்று வரிகளால் படைக்கப்பட்ட அந்தாதிக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். அந்தாதி மற்றும் ஹைக்கூ என்ற சொற்களின் சுருக்கம், அந்தாதிக்கூ கவிதைகளாக உள்ளன. முதல் வரியில் முடிந்த சொல்லை கொண்டு, அடுத்த வரியில் ஆரம்பிக்கும் கவிதை மொழியாகிறது. அதில், ‘ஆடிய கால்கள், கால்களின் வலி, வலியில் தங்கக் கொலுசு... தடுக்கி விழுந்தான், விழுந்தவன் எழவில்லை, எழ முடியாமல் மதுக்கடை’ என்கிறது ஒரு கவிதை.
எருமையின் முதுகில் ஓய்வு எடுக்கும் பறவைகளை பார்த்து, ‘ஓய்வெடுத்த குருவி, குருவிக்கு மகிழ்ச்சி, மகிழாத எருமை’ என பாடுகிறது. நடிகையின் வாழ்க்கையை, ‘நடிகையின் அற்ப வாழ்வு, வாழ்வில் தினமும் சாயம், சாயம் போன வாழ்க்கை’ பேசுகிறது. ஒவ்வொரு கவிதையும் வாசிப்பில் சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
– ராகவ்